Friday, March 27, 2009

பில்லா குப்பம்

"அருந்ததியர் அறிவாளர் பேரவை" என்ற அமைப்பினர் தமது அமைப்பின் துவக்க நிகழ்ச்சிக்காக கேட்டுக்கொண்டதற்கிணங்கி ஒரு வருடம் முன்பாகத் தயாரித்துத் தந்த சிறு முயற்சி.

மிக்க அவசர கதியில் இரண்டே நாட்களில் தயாரித்தது. அதனால் நிறையவே குறைகள் உண்டு. பார்த்த நண்பர்கள் சிலர் “லஜ்ஜாவதியே” பாடல் போல shake பண்ணி எடுத்திருக்கியே என்று கிண்டல் செய்ததுண்டு :)


video

Wednesday, March 25, 2009

சுனாமி நிழற்படத் தொகுப்பு


video


2006 பிப்ரவரி மாத வாக்கில் (என்று நினைவு) ADRA என்ற தன்னார்வக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எனது இளைய நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி தயாரித்த நிழற்படத் தொகுப்பு இது.

அவரது அழைப்பை ஏற்று புதுவையில் இருந்த அவரது அலுவலகம் சென்றதும், மொத்தமாக 500 நிழற்படங்களை தொப்பென்று போட்டுவிட்டு, "என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது; 5 நாட்களில் எனது மேலதிகாரிகளைக் கவர்வது போன்று ஒரு தொகுப்பாகத் தரவேண்டும்," என்று சொன்னதும் முதலில் தலை சுற்றியது.

பின் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அத்தொண்டு நிறுவனம் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் நிழற்படங்களைப் பிரித்து, வடிகட்டி, 'ஏதோ ஒரு' ஒழுங்குக்குக் கொண்டுவந்து, நிழற்படங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு narrative உருவாக்கி ஒருவழியாக முடித்தேன்.

பின்னொலிப்பு இசை ஹரிப்பிரசாத் செளரேஷியாவின் ஆல்பத்திலிருந்து (எது என்பதும் நினைவில் இல்லை) ‘சுட்டது'.


Monday, March 23, 2009

விக்கிபீடியா சாரே!

video


(சமர்ப்பணம்: விக்கிபீடியா அறி"வாளி"களுக்கு)

Thursday, November 6, 2008

எனது முதல் குறும்பட முயற்சி



video

என் முதல் குறும்பட முயற்சி இது - 2005 -ல்.

கையில் 'நயா பைசா' இல்லாமல் முழுக்க முழுக்க நண்பர்களின் உதவியோடும் ஒத்துழைப்பிலும் எடுத்தது.

இதற்கு முன்பாக, ISRO 2003 - ன் தொடக்கத்தில் திட்டமிட்டிருந்த ஒரு அறிவியல் தொலைக்காட்சிக்கு “சிரிப்பு” குறித்து 13 எபிசோட் வரும் வகையில் ஒரு முன்மொழிதலை அனுப்பியிருந்தேன். தொடக்கத்தில் மிகுந்த ஆர்வம் காட்டியவர்கள் “சிரிப்பு” குறித்த ஆய்வு செய்யும் எந்த விஞ்ஞானியாவது எனது நோக்கை வழிமொழியக் கேட்டார்கள். முடிந்த அளவிற்கு தேடியதில் ஒருவர் கூட அத்தகைய ஆய்வில் ஈடுபட்டிருக்கவில்லை.

கைநழுவிப் போனது.

அதன்பின் சில முயற்சிகள் ... தோல்விகள்.

எந்த தொண்டு நிறுவனத்திடமோ தனிநபர்களிடமோ கைகட்டி நிற்கக்கூடாது என்ற பிடிவாதத்தில் வாய்ப்புகளே கிட்டாமல் போனது மட்டுமே மிச்சம்.

அச்சமயம் ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் உடல் ஊனமுற்றவர்களை பாசிட்டிவான நோக்கில் சித்தரிக்கும் ஒரு நிமிடக் குறும்படப் போட்டியை அறிவித்திருந்தது.

சில நாட்கள் அசைபோட்டுக் கொண்டிருந்ததில் தோன்றியதே இக்குறும்படமானது.

ஸ்க்ரிப்டோ, ஸ்க்ரீன் ப்ளேவோ எதுவும் எழுதாமல் என் மனதில் தோன்றியதை வைத்து முயற்சித்தது.

கோவையில் எனது நண்பர் மார்டின் கல்யாண வீடியோ எடுப்பவர். ஒப்பந்த அடிப்படையில் நண்பர் ஒருவரிடம் பணியாற்றி வருபவர். அவரும் எனது நண்பர். இருவரிடமும் பேசியதில் சில மணிநேரங்கள் காமிராவை இலவசமாகத் தர ஒப்புக்கொண்டார். மார்டினே காமிராவை இயக்கினார்.

நான் கோவை செல்வதற்கு முன்னதாக, நண்பர்களுக்கு தெரிவித்து வைத்தது:

1) முதல் ஷாட்டில் வரும் இளைஞரை “பிடித்து” வைக்கவேண்டும். (அவருக்கு அப்போது 16 வயதே இருக்கும். கோவை தங்கப் பட்டறையில் வேலை செய்து வந்தார். அதற்கு முன்பாக அவர் வேலை பார்க்கும் பட்டறையில் இரவுகளில் தங்கி நீண்ட நேரம் உரையாடிய நெருக்கம் உண்டு. ஏனோ அவரது முகம் இப்பாத்திரத்திற்கு பொருத்தம் என்று தொடக்கம் முதலே எனக்கு நிலைத்துவிட்டது.)

2) உடல் ஊனமுற்ற நண்பர் எவரையாவது விஷயத்தை விளக்கி தயார் செய்துவைக்க வேண்டும்.

3) ஒரு வளர்ப்பு நாயை ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோவை சென்று இறங்கினால், முதல் இளைஞரைத் தவிர ஒரு தயாரிப்பும் நடந்திருக்கவில்லை.

நண்பரகளை “கீ” கொடுத்தபின் இரண்டாவது இளைஞர் நடிக்க ஆர்வம் காட்டினார். அவரும் பட்டறையில் வேலை செய்பவர். பார்ப்பதற்கு வயது கூடியவர் போல தோற்றம் தந்தாலும் அவருக்கும் வயது 20 - க்குள்தான் இருக்கும்.

ஆனால், ஊன்றுகோலாக ‘நடிக்க' உருப்படியான ஒரு தடி கூட கிடைக்கவில்லை.

நாயும் இல்லை.

தெருவில் அநாமதேயமாக சோம்பேறித்தனமாக திரிந்துகொண்டிருந்ததைக் கவனித்து அது அரண்டுவிடாமல் முதல் காட்சியை ஒருவழியாக முடித்தோம்.

கல்லெறிந்ததும் அது ஓடிவிட்டது.

அதற்குப் பின் அடுத்த நாய் வரும்வரை காத்திருப்பு.

வேடிக்கையும் கும்மாளமாக ஒருவழியாக எடுத்து முடித்தது ஒரு இனிய அனுபவம்.

எடிட்டில் இசை சேர்க்கக் கூட நேரம் இல்லை. செலவழிக்க பணமும் இல்லை.

என்றாலும் ஏதோ ஒன்றை செய்து முடித்த திருப்தி.

UNESCO குறும்படத்திற்கு ஏற்கனவே செய்யப்பட்ட முயற்சியாக காட்டப் பயன்பட்டது எதிர்பாராதது :)


Tuesday, September 30, 2008

கொசுத்தொல்லையும் ஸ்டீவன் ஹாக்கிங்சும் கவுண்டமணியும்

பதிவர் ஸ்ரீதர் நாராயணன் “நேரத்தின் வரலாறும், புதிர் பிரதேசமும், கவுண்டமணியும்” (காலத்தின் வரலாறு என்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?) என்ற தலைப்பில் எழுதியிருந்த பதிவில் (http://www.sridharblogs.com/2008/09/blog-post_28.html) இரு பின்னூட்டங்கள் இட்டிருந்தேன். இரண்டாவதில் ஸ்டீவன் ஹாக்கிங்சை நக்கலடித்த ஒரு நகைச்சுவைக்காட்சி “Super Hero Movie" - யில் வருவதையும் முடிந்தால் அதை பதிவிலேற்றுகிறேன் என்றும் முடித்திருந்தேன். அதற்காக இந்தப் பதிவு.

video
மேலும், கவுண்டமணி ஏதோ எல்லாப் படங்களிலும் தானே சொந்த வசனத்தைப் பேசி நடிப்பது போலவும், ‘சாதிய எதிர்ப்புப் கலகக்காரன்' என்பது போலவும் தன்னை அப்படியாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈனப் பிறவி எழுதுவது கண்டால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.
(ஈனப்பிறவிக்கு பொச்சுக் கொழுப்பு இன்னும் அடங்கவில்லை போலிருக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒவ்வொரு பதிவிலும் யாராவது ஒருவரை - அய்யனார், சுந்தர், பைத்தியக்காரன், அடியேன், இப்போது சுகன் வரைக்கும் - யாரையாவது சீண்டிக்கொண்டே இருக்கிறது. 'ப்ரெஞ்சுப் பேரழகி'யின் பின்னூட்டத்தை வெளியிட்டு ”ஐந்து நிமிடம்கூட என் பதிவில் அது இருக்கவில்லை” என்று பச்சைப் பொய் சொல்லி மாட்டிக் கொண்ட பின்னும் ஈனமானம் இல்லாமல் தன் அசட்டுப் பொச்சரிப்பை பொரிந்து தள்ளிக்கொண்டே இருக்கிறது.)
ஸ்ரீதர் நாராயணன் எழுதியிருப்பது போல கவுண்டமணி நடித்த பாத்திரங்களின் நகைச்சுவை பெரும்பான்மையும் மற்றவர்களை நக்கலடித்து இன்பம் காணும் ஒருவகை குரூர நகைச்சுவை. கவுண்டமணியின் டைமிங் சென்ஸ் திரைப்படத் துறையில் பெயர் பெற்றது போலவே அவரைக் கண்டு மற்ற கதாநாயக அந்தஸ்து பெற்ற நடிகர்கள் ஒதுங்கிப் போனதன் காரணம் அவர் ‘செட்டில்' யாருக்கும் மரியாதை தரமாட்டார் என்பதே.
மேலும், எம். ஆர். ராதா போன்று நாடகத்தில் நடிக்கும் போது சூழலுக்கேற்ப டைமிங் சென்ஸோடு புதிய வசனங்களை உதிர்ப்பதற்கும் திரைப்படப் படப்பிடிப்பில் 'சொந்த' வசனங்களை கலந்துவிட்டு அடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக கவுண்டமணிக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நடிகர்களுக்கும் “நகைச்சுவை ட்ராக்” எழுதிவருபவர், “சோப்பு சீப்பு கண்ணாடி” திரைப்படத்தில் நாகேஷுடன் இணைந்து நடித்த ஒரு நகைச்சுவை நடிகரே. (அவரது பெயர் நினைவில் இல்லை என்பது கொடுமை!)
“கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவை ட்ராக்கை எழுதியவரும் இவரே.
பதிவர் வெட்டிப்பயல் தனது பதிவில் (http://vettipaiyal.blogspot.com/2008/09/blog-post_28.html) ஏற்றியிருக்கும் “சூரியன்” திரைப்பட “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” ட்ராக்கில் வருபவர் அவர்.
அவர் இவரே:


--------------------------------------------------------

திருத்தங்கள்:

மேலுள்ள படத்தில் இருப்பவர் நான் குறிப்பிட முனைந்த வீரப்பன் என்பவரல்ல, ”பசி நாராயணன்” என்பதைப் பலரும் சுட்டிக் காட்டினர்.

நன்றிகள்.

பதிவர் வெட்டிப்பயல் அவர்களின் இது தொடர்பான இடுகையிலிருந்து அவரும் கவுண்டமணியும் இணைந்து நடித்த ”உதய கீதம்” படத்திலிருந்து ஒரு சிறு காட்சியும், ஒரு snap shot - ம்.

video